பாஜக அணியில் தேமுதிக: 130 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் விதித்த நிபந்தனையை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாரதிய ஜனதா கூட்டணி யில் இடம்பெற்றால் தேமுதிகவுக்கு 130 தொகுதிகள்வரை ஒதுக் கப்படும் எனக் கூறப்படுகிறது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய தரப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் எந்தத் தரப்புக்கும் சாதகமான பதிலை அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில், இரு தினங் களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து விஜயகாந்தை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனது நிபந்தனைகளை முன்வைத்து பேசிய விஜயகாந்த், அவற்றை ஏற்பதாக இருந்தால் கூட்டணிக்குத் தயார் எனக் கூறியதாகத் தெரிகிறது.

முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்க வேண்டும், தேமுதிகவுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் ஆகியவையே முக்கிய நிபந்தனைகளாக அவரால் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சி மேலிடத் துக்கு ஜவடேகர் தகவல் தெரிவித் தார். இதையடுத்து தீவிர ஆலோசனை நடத்திய பாஜக மேலிடம், விஜயகாந்தின் நிபந்த னைகளை ஏற்க முன்வந்திருப்ப தாக ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன. மேலும், பாஜ அணியில் பாமகவை சேர்க்கக்கூடாது என் பதும் தேமுதிகவின் நிபந்தனை களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாமக தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மக்கள் நலக் கூட்டணி, முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டு, தேமுதிகவுக்கு நூறு தொகுதி களைத் தர உள்ளதாக தகவல் வெளியானது. இப்போது அதை விட அதிக தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!