துருக்கியில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

அங்காரா: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான வட்டாரப் பகுதியில் நேற்று குண்டு வெடித்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுல்டானாமெட் வட்டாரத்தில் குண்டு வெடித்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் கூறினார்.

அந்த குண்டு வெடிப்பில் 15 பேர் காயம் அடைந்ததாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது. அந்த குண்டு வெடிப்புக்கு தற்கொலைப் படையைச் சேர்ந்த சிரியா நாட்டுடன் தொடர்புடைய போராளியே காரணம் என்று துருக்கி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டிகள் அவ் விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியைப் போலிசார் சுற்றி வளைத்தனர். இஸ்தான்புல் நகரில் அண்மைய மாதங்களாகவே தொலைதூர இடதுசாரி போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அந்நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் அந்த இடத்தில் கூடியுள்ளனர். அந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அது தற்கொலைத் தாக்குதல் என்று போலிசார் கூறியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!