மறுவிற்பனை வீவக வீடு விலை பிப்ரவரியில் 0.2% கூடியது

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு களின் மறுவிற்பனை விலை கடந்த ஜனவரி விலையுடன் ஒப் பிடுகையில் பிப்ரவரியில் 0.2% கூடியது. நான்கு அறை வீட்டு விலைதான் ஆக அதிகமாக 0.8% அதிகரித்துள்ளது. மூவறை வீட்டு விலை 0.2% உயர்ந்தது. அதே மாதத்தில் ஐந்து அறை, எக்சிகியூட்டிவ் வீடுகளின் விலை முறையே 0.1% மற்றும் 0.7% இறங்கியது. எஸ்ஆர்எக்ஸ் குடியிருப்புச் சொத்து விலை அறிக்கை மூலம் இந்த விவரங்கள் தெரியவந்து உள்ளன. மாத அடிப்படையில் கடந்த மாதத்தில் மறுவிற்பனை விலைகள் உயர்ந்த போதிலும் ஆண்டு அடிப் படையில் பார்க்கையில் சென்ற பிப்ரவரியில் எல்லா மறுவிற்பனை வீடுகளின் விலைகளும் 0.6% குறைந்தன.

விலை ஒருபுறம் இருக்க, பிப்ரவரியில் முன்னிலும் குறைந்த வீடுகளே கைமாறின. வீவக மறுவிற்பனை விலை புள்ளிவிவரங்களை எஸ்ஆர்எக்ஸ் சொத்துச்சந்தை நிறுவனம் தொகுத்தது. அதன்படி பார்த்தால், கடந்த பிப்ரவரியில் 1,200 மறுவிற்பனை வீடுகள் கைமாறின. ஜனவரியில் விற்பனையான வீடுகள் 1,286. சென்ற மாதம் கைமாறிய வீடுகள் 6.7% குறைவு. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மறுவிற்பனை வீடுகள் எண்ணிக்கை பிப்ரவரியில் 4.5% கூடியது. ஜனவரியில் மறுவிற்பனை விலைகள் 0.5% குறைந்தன. அதற்கு முன்னதாக தொடர்ந்து ஆறு மாதங்களாக விலைகள் ஏறுமுகமாகவே இருந்து வந்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!