உடும்பு பிடித்த வெளிநாட்டு ஊழியர்கள்

வில்சன் சைலஸ்

உடும்பு பிடித்த வெளிநாட்டு ஊழியர்கள் ஜூரோங் தொழிற்பேட்டையில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிலருக்கு நேற்று வித்தி யாசமான அனுபவம் கிடைத்தது. 'பிவிசி' குழாய்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வெளியே வந்த உடும்பைத் துணிச்சலுடன் பிடித்து கூண்டில் அடைத்தனர் வெளிநாட்டு ஊழியர்களில் சிலர். காரைக்குடியைச் சேர்ந்த 40 வயது திரு பாலசுப்ரமணியமும் அவரது சக நண்பர்களும் எப்போதும் போல தயாரிக்கப்பட்ட குழாய்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த போது மதியம் சுமார் 2.15 அளவில் நீளமான ஓர் உடும்பு தென்பட்டது.

உடும்பைப் பார்த்தவர் மற்றவர்களி டம் தகவல் கூற உடனே களத்தில் இறங்கி கிட்டத்தட்ட ஐந்து நிமிடத் திற்கு விடாமல் துரத்தி உடும்பைப் பிடித்ததாக சொன்னார் திரு பால சுப்ரமணியம். "உடும்பு தப்பி ஓட முடியாமல் மெதுவாக நகர்ந்தது. எனினும், அதை நெருங்கியவுடன் ஓட்டம் பிடித்தது. அதை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என நானும் இரண்டு சக ஊழியர்களும் விரட் டினோம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!