அமரர் லீ குவான் இயூவை நினைவுகூர பல நிகழ்ச்சிகள்

சிங்கப்­பூ­ரின் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரும் முதல் பிர­த­ம­ரு­மான காலஞ்­சென்ற திரு லீ குவான் இயூ மறைந்து ஓராண்டு நிறை­வடை­வதைத் தொடர்ந்து நூற்­றுக்­கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. திரு லீ குவான் இயூ கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தனது 91ஆம் வய­தில் கால­மானார். அவரை நினைவுகூரும் வகையில் சமூக அமைப்­பு­களைச் சேர்ந்த­வர்­களும் தனிப்­பட்­ட­வர்­களும் ஒன்­றிணைந்து மார்ச் மாதம் பல்­வேறு நிகழ்ச்­சி­களுக்கு ஏற்­பாடு செய்­துள்ள­னர். இதனை மக்கள் கழ­கத்­தின் துணைத் தலை­வ­ரும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரு­மான சான் சுன் சிங் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அறி­வித்­தார்.

பசுமை, சுகா­தா­ரம் போன்ற­வற்றை வலி­யு­றுத்­தினார் திரு லீ குவான் இயூ. அதனை நினைவு கூரும் வகையில் ஜூரோங் ஏரி பூங்கா­வில் மரம் நடும் நிகழ்­வும், செம்ப­வாங் பூங்கா­வில் நடைப்­ ப­யிற்­சி­யும் நடை­பெ­ற­வுள்­ளன. திரு லீயை நினை­வு­கூ­ரும் வகை­யில் மூன்று நினை­வி­டங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. தஞ்­சோங் பகா­ரில் உள்ள டக்ஸ்­டன் பிளேன் பார்க், இஸ்­தானா பார்க் ஆகிய இடங்களி­லும் சிங்கப்­பூர் ஆற்றை ஒட்­டி­ய­வா­றும் (நாடா­ளு­மன்றக் கட்­ட­டத்­திற்கு வெளியே) இந்த நினை­வி­டங்கள் அமைக்­கப்­படும். இந்த நினை­­விடங்கள் மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை பொது­மக்­கள் பார் வைக்கு திறந்­தி­ருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!