ஜவடேகரை சந்திக்க விஜயகாந்த் மறுப்பு; கடும் அதிர்ச்சியில் பாஜக

2016-ஆம் ஆண்டு சட்­டப்­ பே­ரவை பொதுத் தேர்­த­லுக்­கான தேதி எந்நேரமும் அறிவிக்கப் படலாம். இந்­நிலை­யில் தேமு­தி­க­வு­டன் உறவு வைத்­துக்­கொள்ள திமுக, மக்கள் நலக் கூட்டணி என கட்­சி­கள் அழைப்பு விடுத்த வண்ணம் உள்­ளன. பாஜ­க­வும் தன் பங்­குக்கு தேமு­தி­கவை விடா­மல் துரத்­து­கிறது. இப்­போது பாஜ­க­வில் சமத்­­துவ மக்கள் கட்சி, ஐ.ஜே. கே, புதிய நீதிக்­கட்சி ஆகிய கட்­சி­கள் இணைந்­துள்­ளன. இருப்­ பினும் தேமு­திகவுடனான கூட்ட ணியே பலம் என்று அக்­கட்சி கருதுவதாகத் தெரிகிறது. முன்னர் திமு­கவை நெருங்கி வரு­வ­து­போன்ற பாஜ­க­வின் பாவனை­யால் பிரிந்­தி­ருந்த காங்­கி­ர­சும் திமு­க­வும் மீண்­டும் கைகோர்த்­தன. இப்­போது பாஜக, தேமு­தி­க­வு­டன் உண்மை­யி­லேயே கூட்­டுச் சேர முயற்சி செய்­கின்றதா என்­ப­தில் பல­ருக்கு ஐயம் இருக்கவும் செய்கிறது.

இருப்­பி­னும் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என அக்­கட்சி தேமு­தி­க­வு­டன் சந்­திப் பை­யும் பேச்­சு­வார்த்தை­யும் தொடர்ந்த வண்ணம் உள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தேமு­திக தலை­வர் விஜயகாந்தை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­துக் கூட்­ட­ணிப் பேச்­சு­வார்த்தை நடத்­தினார் பாஜ­க­வின் பிர­காஷ் ஜவ­டே­கர். அதேபோல் நேற்­றும் தேமு­தி­க­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த அவர் சென்னை வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்­கெல்­லாம் பிடி கொடுக்­காத தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த், ஜவ­டே­கர் சென்னை வரும் நேரம் பார்த்து தனது சொந்தத் தொகு­தி­யான ரி‌ஷி­வந்­தி­யம் சென்­று­ விட்­டார். விஜ­ய­காந்­தின் மனைவி பிரே­ம­ல­தாவை சந்­தித்து கூட்டணி பற்றி பேசுவதற்கு ஜவ­டே­கர் முயற்சி மேற்­கொண்ட­தா­க­வும் அதற்கு பிரே­ம­லதா மறுத்­து­விட்­ட­தா­க­வும் கூறப்­படு­கிறது.

இந்­நிலை­யில் திமுக தலைமை­யி­லான கூட்­ட­ணி­யில் திமுக- 150; தேமு­திக- 59; காங்­கி­ரஸ் 25 தொகு­தி­களில் போட்­டி­யி­டு­வது என முடிவு எட்­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. இந்தத் தொகு­திப் பங்­கீடு விரை­வில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட உள்­ளது. சட்­ட­மன்றத் தேர்­த­லில் ஆளும் அதி­மு­கவை வீழ்த்த ஒரு வலு­வான கூட்­ட­ணியை அமைக்க திமுக முயற்சி செய்து வரு­கிறது. திமுக தலை­வர் கரு­ணா­நி­தியை கோபா­ல­பு­ரம் இல்­லத்­தில் மார்ச் 11 அல்லது 12-ஆம் தேதி விஜ­ய­காந்த் சந்­திப்­பார் எனக் கூறப்­படு­கிறது. இதற்­கிடை­யில் நாளைக்கு விஜ­ய­காந்த் திருப்­பதி செல்ல உள்­ள­தா­க­வும் வழிபாட்டிற்குப் பின்னரே தன் முடிவை அறி­விப்­பார் என்­றும் தேமு­திக வட்­டா­ரங்கள் தெரி­விக்கின்றன. கடைசி நேரத்தில் விஜய காந்த் கூட்டணி முயற்சிகளைக் கைவிடலாம் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!