கவலையில் மூழ்கிய அஞ்சலி

நடிகர் விமல், அஞ்சலி நடித்த 'மாப்ள சிங்கம்' படம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாகப் புலம்புகிறார் விமல். புதுமுகம் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் 'மாப்ள சிங்கம்.' கடந்த 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களில் சிக்கியிருந்த அஞ்சலி, அந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நடித்திருக்கும் படம் என்பதால் அவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளார். வெகுநாட்கள் கழித்து நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள படம் என்பதால் தனக்கு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் சிறப்பாக அமையும் என்பதே அஞ்சலியின் மனக் கணக்காக இருந்தது. ஆனால் இத்தகைய எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கும் வகையில், தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்ட 'மாப்ள சிங்கம்' படத்தின் பிரதி இணையத்தில் கசிந்துள்ளது. தணிக்கைக் குழுவுக்கென தயாரிக்கப்பட்ட பிரதி என்பதற்கான குறியீடுகள் அனைத்துமே இணையத்தில் வெளியான பிரதியிலும் காணப்படுகிறது.

இதற்கு முன் சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் இதேபோலத்தான் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்து அண்மையில் 'சேதுபதி' படமும் திரையரங்குகளில் வெளியான அன்றே இணையத்தளங்களி லும் வெளியிடப்பட்டது. கேரளாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரேமம்' படத்தின் தணிக்கை பிரதி யும் இதேபோல திருட்டு வீடியோவாக வெளியானது நினைவிருக்கலாம். "திருட்டு வீடியோ எப்படி வெளியாகிறது என்று திரைத்துறையில் உள்ள அத்தனை பேருக் கும் தெரியும். "ஆனால் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்காமல் மவு னம் காப்பதால்தான் இன்று அந்தப் பிரச்சினை த லை வி ரி த் தா டு கி ற து , " என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!