முகைதின்: அம்னோவில் தொடர்ந்து இருப்பேன்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், அம்னோ கட்சியில் தாம் தொடர்ந்து இருக்கப் போவதாகத் தெரி வித்துள்ளார். ஆனால் கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட விவ காரத்தை அவர் சங்கப் பதி வகத்திடம் கொண்டுசெல்ல விருப்பதாகக் கூறியுள்ளார். கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது முதல் முகைதின் யாசின் அம்னோவில் தொடர்ந்து இருப்பாரா அல்லது கட்சி யிலிருந்து விலகுவாரா என்ற பேச்சு அடிபடும் வேளையில் தான் தொடர்ந்து அம்னோவில் இருப்பேன் என்றும் கட்சியி லிருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அப்படி தான் சொன்னதுமில்லை என்றும் முகைதின் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கட்சியில் தொடர்ந்து இருப்பதே நல்லது என்றும் பிரச்சினை கட்சி உறுப்பினர் களுடன்தான் என்றும் கட்சியுடன் அல்ல என்றும் முகைதின் கூறினார். "கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து சங்கப் பதிவதிகாரிக் குக் விரைவில் கடிதப் எழுதப் போகிறேன். இடைநீக்கம் முறைப்படிச் செய்யப்பட்டதா என்பதை அவர்கள் முடிவு செய் யட்டும்," என்று முகைதின் கூறினார். அம்னோவில் தொடர்ந்து இருக்க விரும்புவ தால் தான் எதுவும் செய்ய மாட்டேன் என்பது பொருளல்ல என்றும் அவர் சொன்னார். "எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!