நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனீசிய மக்கள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் புதன்கிழமை 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளி யேறி உயரமான இடங்களை நாடிச் சென்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் இது ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளி என அமெரிக்க புவியியல் மையம் மதிப்பிட்டது.

பின்னர் படிப்படியாகக் குறைத்து இறுதியில் 7.8 ரிக்டர் அளவாக பதிவு செய்யப்பட்டது. இந்த நில நடுக்கம் மேற்கு சுமத்ரா தீவில், பாடாங் நகருக்கு தென்மேற்கில் 808 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண் டிருந்தது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது என்றும் அப்போது கட்டடங்கள் ஆட்டம் கண்டதாகவும் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளையும் கட்டடங் களையும்விட்டு வெளியேறி வீதிகளுக்கும் திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயரமான இடங்களை நாடிச் செல்லும் குடியிருப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!