வெயிலின் தாக்கம்: தீப்பற்றி எரியும் கொடைக்கானல் வனப்பகுதி

மதுரை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொடைக்கானல் வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிவதாகவும் இதனால் அரிய வகை மரங்கள், மூலிகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தீயை அணைக்கும் பணியில் ஏராளமானோர் இரவு பகலாக ஈடுபட்டு வரும் நிலையில், காற்று வீசுவதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை எனக் கூறப்படுகிறது. காட்டுத் தீயால் பொதுமக்களுக்கோ சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!