சுருதிக்கு போலிஸ் வலை

கோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் சந்தோஷ்குமார், 32. திருமணத்திற்காக இணையத்தளத்தில் பதிவு செய்தவருடன் கோவை பீளமேட்டைச் சேர்ந்த சுருதி, 20, அறிமுகமானார். சுருதி சந்தோஷ் குமாரை திருமணம் செய்து கொள் வதாகக் கூறி, நெருங்கிப் பழகி, அவரிடம் ரூ.43 லட்சம் பணத்தை அபகரித்து தலைமறைவானார். இதுகுறித்து கோவை குற்றப் பிரிவு போலிசில் சந்தோஷ்குமார் புகார் செய்ய, போலிசார் சுருதி யைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் சிவ சக்தி நகரைச் சேர்ந்த அருள் குமரகுரு ராஜா, 28, என்ற பொறி யியலாளரும் கோவை போலிசில் புகார் செய்தார். அதில் இணையத் தளம் மூலம் அறிமுகமான சுருதி தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.50 லட் சத்தை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டார். அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். புகார்களையடுத்து போலிசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் இன்னும் பல வாலிபர்களையும் சுருதி வீழ்த்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

"இணையத்தள திருமணத் தகவல் மையத்தில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள சுருதி பணக்கார பொறியியலாளர்களைக் குறிவைப்பார். அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று உங்களைப் பிடித்திருக்கிறது. முறைப்படி வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள் என்று கூறுவார். அதற்கு முன்பு ஷாப்பிங் அழைத்துச்சென்று லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கி மோசடி செய்வார். திருமணத்திற்கு வற்புறுத்தும்போது தனக்கு மூளையில் கட்டியிருப்பதாகக் கூறி மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பணத்தைக் கறந்து ஏமாற்றிவிடுவார்," என்று போலிசார் விவரம் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!