விமானங்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும்

வரும் ஜூலை 1 முதல் சிங்கப்பூர் விமானங்களின் பயணங்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 27,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட விமானங்களுக்கும் 19 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கும் இந்தப்புதிய விதிமுறை பொருந் தும். மேலும் சிங்கப்பூரின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர், டைகர் ஏர், ஸ்கூட், ஜெட்ஸ்டார் ஏசியா, எஸ்ஐஏ சரக்கு விமானங்கள் ஆகியவை புதிய விதிமுறையின் கீழ் வருகின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் குறைந்தது 15 நிமிடங் களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து விமானங்களை தானி யக்க முறையிலோ அல்லது தானியக்க முறையில் அல்லா மலோ 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பது கட்டாய மாகிறது.

2018 நவம்பர் 8ஆம் தேதியி லிருந்து தானியக்க முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது. நவம்பரிலிருந்து வழக்கமான விமானங்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக சிவில் விமான நிறுவனத்தின் திட்டத்தின்படி இப்புதிய விதி முறை அமலாக்கப்படுகிறது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கெவின் ‌ஷும், "பயணம் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பே எங் களுக்கு முக்கியம். மேம்பட்ட விமானக் கண்காணிப்புக் குறித்த அண்மைய விதிமுறை களை அமலாக்குவதில் தொழிற் துறையினருடன் இணைந்து செயல்படுவோம்," என்றார்.

சாங்கி விமான நிலையத்தில் சில்க்ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள். சிங்கப்பூர் விமானங்கள் முழுப் பயணத் தின்போது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!