துருக்கியில் குர்தியப் போராளிகள் தாக்குதல்

இஸ்தான்புல்: துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று கார் குண்டு வெடித்ததில் போலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 35 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அத்தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட குர்திய பாட்டாளி கள் கட்சியே காரணம் என்று கூறப்படுகிறது. துருக்கிய அரசாங்கத்திற்கும் குர்திய பாட்டாளிகள் கட்சிக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு முறிந்தது முதல் துருக்கியில் வன்செயல் சம் பவங்கள் அதிகரித்துள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த போராளிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை இரு பெண்கள் இஸ்தான்புல் நகரில் உள்ள போலிஸ் தலைமையகத் தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர். அத்துடன் அவ்விருவரும் ஒரு போலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவ்விருவரையும் போலிசார் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறின. சென்ற மாதம் ஒரு ராணுவ பேருந்து மீது குர்திய போராளிகள் தாக்குதல் நடத்திய தில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

போலிஸ் தலைமையகம் தாக்கப்பட்டபோது போலிசார் தங்களை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்து அவசரமாக வெளியேறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!