உலகக் கிண்ண துப்பாக்கி சுடும் போட்டியில் ஜாஸ்மினின் முதல் பதக்கம்

சிங்கப்­பூ­ரின் துப்­பாக்கி வீராங்கனை ஜாஸ்­மின் செர், உல­கக் கிண்ணப் போட்­டி­யில் முதல் பதக்­கத்தை வென்றுள்­ளார். பேங்காக்­கில் துப்­பாக்கி சுடும் விளை­யாட்டு சம்­மே­ள­னத்­தில் நடை­பெற்று வரும் உல­கக் கிண்ணப் போட்­டி­யில் நேற்று முன்­தி­னம் செர் வெண்­க­லப் பதக்­கம் வென் றார். 25 வய­தான வீராங்கனை செர் மொத்தம் 184.6 புள்­ளி­கள் பெற்று மூன்றா­வது இடத்தைப் பிடித்­ துள்­ளார். இந்தப் போட்­டி­யில் சீனா­வின் ஒலிம்­பிக் பதக்க வீராங்கனை யி சிலிங் 207.7 புள்­ளி­கள் எடுத்து முதல் நிலை­யி­லும், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஒலி­வியா ஹோல்ப்­மண் இரண்டா­வது நிலை­யி­லும் வென்­றுள்­ள­னர்.

மற்ற சிங்கப்­பூர் வீரர்­க­ளான ஹோ ஸியூ யி, 16, இறு­திச் சுற்­றுக்கு தேர்வு செய்­யப்­பட்டு இரண்டாம் நிலை­யில் இருந்தார். ஜாஸ்­மின் செர் நான்காம் நிலை­யில் இருந்த­போது ஸியூ யி 143.5 புள்­ளி­களு­டன் ஐந்தாம் இடத்­தில் இருந்தார். வெண்­க­லப் பதக்­கம் வென்ற ஜாஸ்­மின் செர், நாளை நடை­பெ­ற­வி­ருக்­கும் 50 மீட்டர் துப்­பாக்கி சுடும் போட்­டி­களில் கலந்­து­கொள் ­வார். இப்­போது தாய்­லாந்­தின் பேங் காக்­கில் நடை­பெற்று வரும் உல­கக் கிண்­ணப்­போட்டி அடுத்து ஏப்­ர­லில் ரியோ டி ஜனெய்­ரோ­வி­லும் மே, ஜூன் மாதங்களில் அஸர்­பெய்­ஜா­னின் முனிச், பக்கு நக­ரங்களி­லும் நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!