இளம் கோல்ப் வீரரின் சாதனையால் மெய்சிலிர்த்த டைகர் உட்ஸ்

கோல்ப் விளை­யாட்­டில் உல­கத் தர­வ­ரிசை­யில் முதல் நிலை­யில் இருந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸை போல் கொஞ்ச­மும் அலட்­டிக் கொள்­ளா­மல் ஒரே வீச்­சில் பந்தை குழிக்­குள் தள்ளி (ஹோல்= இன்=ஒன்) சாதனை படைக்க முடி­யுமா? முடி­யும் என்று நிரூ­பித்­தி­ருக் கிறார் 11 வய­துச் சிறு­வன். அது­வும் தனது முதல் வீச்­சில் 'ஹோல்= இன்=ஒன்' சாதனை படைத்­துள்­ளார் சிறுவன் டெய்­லர் குரோ­ஸி­யர். டெக்­சாஸ் நக­ரில் புதி­தா­கத் திறக்­கப்­பட்ட கோல்ப் விளை­யாட்­டுத் திட­லில் இந்தச் சாதனையை நிகழ்த்­தி­யுள்­ளார் டெய்­லர் குரோ­ஸி­ யர். சிறு­வன் டெய்­ல­ரின் இந்த அதி­ரடி ஆட்­டத்தைப் பார்த்­துக் கொண்­டி­ருந்த டைகர் உட்ஸ் மெய்சிலிர்த்துப்போனார். உற்­சா­கத்­தின் உச்­சிக்கே சென்ற டைகர் உட்ஸ், ஓடி வந்து சிறு­வனைத் தழு­விக் கொண்டு பாராட்­டினார்.

ஆச்­ச­ரி­ய­மூட்­டும் அந்த அற்­பு­த­மான பந்த­டிப்­பின் காணொ­ளியை டைகர் உட்ஸ் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந் தார். டெக்­சஸ் நக­ரில் திறக்­கப்­பட்­டுள்ள இந்தப் புதிய கோல்ப் விளையாட்­டுத் திடல் டைகர் உட்­ஸின் உத­வி­யால் வடி­வமைக்­கப் பட்­டது. "குடும்பத்­தி­ன­ரு­ட­னும் நண்­பர்­களு­ட­னும் மகிழ்ச்­சி­யாக ஒன்­று ­கூடி விளை­யா­டிக் களிக்­கும் இட­மாக இந்தத் திடல் வடி­வமைக் ­கப்­பட்­டுள்­ளது. "இந்த ஒன்­று­கூ­ட­லின் வழி இளம் கோல்ப் வீரர்­களை அறி­மு­கப்­படுத்­த­லாம்," என டைகர் உட்ஸ் தனது இணை­யப் பக்­கத்­தில் கூறி­யுள்­ளார். முது­கில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட டைகர் உட்ஸ் இப்போது குண­மடைந்து வரு­வ­தாக தனது பதி­வில் தெரி­வித்திருந் தார். ஆனால் எப்­போது மீண்­டும் கோல்ப் போட்டியில் குதிக்­கப்­ போ­கிறார் என்பது பற்றி எதை­யும் அவர் தெரிவிக்­க­வில்லை. வீட்­டி­லேயே பயிற்சி மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!