கீர்த்தி கனவு நனவானது

தான் ஒரு டாக்டராக எப்படியெல் லாம் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று கனவு கண்டு வந்தாரோ அதையெல்லாம் இப்போது தான் நடித்துவரும் 'ரெமோ' படத்தில் நடித்து நிஜ மாக்கிக்கொண்டு வருகிறார் கீர்த்தி. ஆக, ஏதோவொரு வகை யில் எனது டாக்டர் கனவு நன வாகிவிட்டது போன்ற மகிழ்ச் சியை இந்த 'ரெமோ' படம் கொடுத்துள்ளது என்று கூறு கிறார் கீர்த்தி சுரேஷ்.

'ரஜினிமுருகன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவ கார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் 'ரெமோ'. முந்தைய படத்தில் சிவகார்த்திகேய னுடன் நடித்த காதல் காட்சிகள் மிக இயல்பாக அமைந்ததால் இப் படத்திலும் அவர் எதிர்பார்த்தது போலவே மிக இயல்பாக நடித்து கைதட்டல் வாங்கிக்கொண்டு வருகிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, 'ரெமோ' படத்தில் கீர்த்தி சுரேஷ் டாக்டராக நடிக்கும் மருத்துவமனையில் தாதியாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஆணான அவர் பெண் வேடமிட்டு எதற்காக அங்கு வேலை செய் கிறார் என்பதுதான் படத்தின் கதைக்குள் இருக்கும் ரகசியமாம்.

இப்படத்தில் காதல் காட்சிகளுடன் ஒரு டாக்டராகவும் தத்ரூபமாக நடித்திருக்கிறாராம் கீர்த்தி. கார ணம், அவரது அம்மா மேனகா நடிகை என்றபோதும், கீர்த்தி சுரேசுக்கு சினிமாவில் நடிகை யாகவேண்டும் என்ற ஆசையெல் லாம் இருந்ததில்லையாம். டாக்ட ராக வேண்டும் என்பதுதான் அவ ரது கனவாக இருந்து வந்ததாம். ஆனால், பின்னர் எதிர்பாராத விதமாக அம்மாவின் பாதையில் நடிகையாகிவிட்டதால் அவரது டாக்டர் கனவு கனவாகவே இருந்துவந்தது. இருப்பினும், இப்போது 'ரெமோ' படத்திற்காக ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு டாக்டராக நடித்துவருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தியின் அம்மா மேனகா (இடம்) நடிகை என்ற போதும் நடிப்பாசை என்பது ஆரம்பத்தில் கீர்த்திக்கு சிறிதும் இல்லையாம். டாக்டராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!