அதிமுகவுக்கு விஜயகாந்த் ‘பிரம்மகுண்டம்’ எச்சரிக்கை

திருக்கோவிலுர்: தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக எச்சரித்து இருக் கிறார். விழுப்புரம் மாவட்டம் ரி‌ஷிவந் தியம் தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வளர்ச்சிப் பணி கல்வெட்டு திறப்பு விழா வியாழக்கிழமை திருக்கோவிலூரில் நடந்தது. அதில் பேசிய விஜயகாந்த், 'மாவட்ட அமைச்சர் மோகன் அவர்களே, உங்களை நான் எச்ச ரிக்கிறேன். நீங்கள் எப்படியெல்லாம் தேர்தலுக்காக என்னிடம் கெஞ் சினீர்கள்.

"அதற்குச் சாட்சி, பிரம்ம குண்டம். அந்தக் கிராமத்தில் நீங்கள் என்னிடம் கேட்டதை நினைத்துப் பாருங்கள். ஆனால், அதை நான் சொல்லிக்காட்ட விரும்பவில்லை," என்று பரபரப் பாக எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுகவும் தேமுதிகவும் 2011 சட்டமன்றத் தேர்தலைச் சேர்ந்து சந்தித்து பெரும் வெற்றி பெற்றன. ஆனால் பிறகு இரண்டு கட்சி களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இரண்டும் கீரியும் பாம்புமாக ஆகி கடும் வேகத்துடன் மோதிக்கொள்கின் றன. 2011 வெற்றிக்குத் தானே காரணம் என்று பறைசாற்றி இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று குறைகூறி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!