மூன்றில் வென்று தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

ஆக்லாந்து: இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 36 ஓட்ட வித்தியாசத்தில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரைத் தன தாக்கியது நியூசிலாந்து அணி. முதலிரு போட்டிகளில் நியூசி லாந்தும் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையும் வென்றன. 4வது போட்டியை மழை கெடுத்தது. இத னால் தொடரைச் சமன் செய்ய கடைசி, ஐந்தாவது ஒருநாள் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் நியூசி லாந்தைப் பந்தடிக்க அழைத்தது. தொடக்க வீரர் டாம் லேதம் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும் இன்னொரு வீரரான மார்ட்டின் கப்டில் சதமடித்து (102) அசத்தினார். அணித்தலைவர் கேன் வில்லி யம்சன், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆகியோர் ஆளுக்கு 61 ஓட்டங்களை எடுத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!