அதிமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஏழு அமைச்சர்கள் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள சூழலில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியையும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை நடந்தது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் நடந்த அந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப் பன், எடப்பாடி பழனிச்சாமி, ப.வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன் னாள் அமைச்சர் பொன்னையன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமை யில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டம் மதியம் தொடங்கி இரவு வரை நடந்தது.

அந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டில் நிலவும் முக்கிய பிரச் சினைகள் குறித்தும் அதில் இடம் பெற வேண்டிய மக்களுக்கான நலத்திட்டங்கள், முக்கிய அம்சங் கள் குறித்தும் தேர்தல் அறிக்கை யில் இடம்பெற வேண்டிய அம்சங் கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைகள் ஜெய லலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவரின் வழிகாட்டு தலின்படி இறுதி வடிவம் பெறும் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!