கூட்டணி கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் - விஜயகாந்த்

கூட்டணி கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என்கிறார் விஜயகாந்த் சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக=தேமுதிக கூட் டணி உருவாகி இருப்பதாகவும் இந்த மாதம் 8ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதயை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்கிறார் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில் இரு கட்சிகளுமே இதை மறுத்துள்ளன. "திமுக, தேமுதிக கூட்டணியா?

தேமுதிகவுககு 59 இடங்களா?

உங்களுக்கு எப்படி தெரியும்?

எங்கிருந்து செய்தி கிடைத்தது?

தெரிந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்துகொள்கிறேன்," என்று புதன்கிழமை இரவு செய்தியாளர்களைப் பார்த்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கேட்டார். "நாங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்,. திமுக அணிக்கு தேமுதிக வந்தால் நல்லது, வர வேற்போம்," என்றார் அவர். அதேவேளையில் திருக்கோவிலூரில் விழுப்புரம் மாவட்டம், ரி‌ஷி வந்தியம் தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வளர்ச்சிப் பணி கல்வெட்டு திறப்பு விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், "கூட்டணி பற்றி எனக்குத் தெரியாது. கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்,'' என்று தன் கட்சிக்காரர்களிடம் குறிப்பிட் டார். "கூட்டணி பற்றி விஜயகாந்துக்கு என்ன தெரியும்; பேரத்தைக் கூட்டவே இழுத்தடிக்கிறார் என விவாதம் செய்கின்றனர். என் தொண்டர்களுக்கு நான் சொல்வதுதான் வேதவாக்கு.

'திமுகவா, ஐயையோ வேண்டாம்' என்கிறாரா? 'இருங்கள் இன்னும் பேச வேண்டி இருக்கிறது' என்கிறாரா? தமிழக அரசியலில் பல கட்சிகளை திக்குமுக்காடச் செய்வதில் இவரைப் போன்ற ஓர் அரசியல்வாதி இதுவரை இல்லை என்றே தெரிகிறது. கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!