சென்னை: முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆசீர்வாதம், பாஜக சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் ராசாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆசீர்வாதம், அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் அவர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். வழக்கு விசாரணையின்போது நேரில் முன்னிலையாகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார் ஆசீர்வாதம். இதையடுத்து பாஜக வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், இப்போது தேர்த லில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலேயே பாஜக சார்பில் ஆசீர்வாதம் களம் இறக் கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது. எனினும் அவர் அப்போது போட்டியிடவில்லை. இம்முறை கட்சி மேலிடத்தின் ஒப்புதலுடனேயே அவர் தமது விருப்ப மனுவைத் தாக்கல் செய்த தாகக் கூறப்படுகிறது.