சென்னை: பிரபல இயக்குநரும் லட்சிய திமுக கட்சித் தலைவருமான டி.ராஜேந்தர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாகக் கூறப்படு கிறது. இம்முறை தனது சொந்தத் தொகுதியான மயிலாடுதுறையைத் தனக்கு ஒதுக்கவேண்டுமென திமுக தலைமையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு வாய்ப்பில்லை எனில், சென்னையில் உள்ள பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட ராஜேந்தர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் திமுகவுக் காக பலமுறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார் ராஜேந்தர். திமுகவில் இருந்தபோது கடந்த 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் காரணமாகவே இப்போது அதே தொகுதியில் போட்டியிட அவர் விரும்புவதாகக் கூறப்படு கிறது.
இதேபோல் நடிகர் கார்த்திக் உசிலம்பட்டித் தொகுதியை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் கார்த்திக். திமுக கூட்டணியில் இவர் கள் இருவரது தலைமையிலான கட்சிகளுக்கு தலா ஓரிடத்தை திமுக தலைமை ஒதுக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை திமுக கூட்டணி யில் இடம் கிடைக்கவில்லை எனில் இருவரும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.