‘சிங்கப்பூர் அடையாளத்துக்கு பங்களிக்கும் தொண்டூழியம்’

சமூகத்தில் இரு வழிகளில் முக்கிய பங்கு வகிப்பதால் தொண் டூழியர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று தற்காலிக கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார். ஒன்று, அவர்கள் ஒரே நோக்கத்திற்காக அனைவரையும் ஒன்றிணைத்து தொண்டு புரி கின்றனர். இரண்டு, அவர்கள் சிங்கப்பூர் உணர்வுக்கும் தேசிய அடையாளத்திற்கும் பங்களிக் கின்றனர்.

ஸ்ரீ நாராயண மிஷன் வயோ திகர் நோயாளிகள் இல்லத்தில் நேற்று நடைபெற்ற தொண்டூழியர் களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் வளங்கள் குறைந்த நிலை யில் ஏழ்மையான சூழ்நிலையில் மக்கள் தொண்டு புரிந்தனர் என்றார் தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சருமான அவர். ஆனால் இன்றோ நமக்கு நிறைய வளங்கள் உள்ளன. அதே வேளையில் சிங்கப்பூர் உணர் வையும் வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தத்தையும் தேடிக்கொண் டிருக்கும் மக்கள், சற்று வேறுபட்ட காரணத்திற்காக சமூகத்திற்குப் பங்களிப்பதை அவர் சுட்டினார். "சமூகத்தை மேம்படுத்து வதற்காக தொண்டூழியர்கள் அவர்களுடைய சக்தியையும் ஆர் வத்தையும் பயன்படுத்தி உணர்ச்சி பூர்வமாக நாட்டுடன் ஒன்றாக இணைந்துள்ளனர்," என்று செய்தியாளர்களிடம் கூறினார் திரு ஓங்.

ஸ்ரீ நாராயண மிஷன் வயோதிகர் நோயாளிகள் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களை மகிழ்விக்கும் வண்ணம் இசை விருந்து வழங்கும் தொண்டூழியர்கள். படம்: ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!