கூட்டணி முடிவாகவில்லை: தேமுதிக அதிகாரபூர்வ தகவல்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னும் முடிவு செய்யவில்லை என அக்கட்சி எம்எல்ஏ சந்திர குமார் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஊடகங்கள் தவ றான தகவல்களை பரப்பி வருவ தாக அவர் அதிருப்தி வெளியிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. இம்முறை தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வருவதில் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய 3 தரப்புகளும் விரும்புகின்றன. ஆனால் கூட்டணி குறித்து எந்தவித முடிவையும் எத்தரப்புக்கும் தெரிவிக்காமல் உள்ளார் விஜயகாந்த். இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற விஜயகாந்த் சம்மதித்துவிட்டதாகவும் தேமுதிகவுக்கு 59 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைவர் கருணாநிதி ஒப்புக்கொண்டதாகவும் கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் தொடர்ந்து பரபரப்பு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இதையடுத்தே காணொளிப் பதிவை வெளியிட்டு தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் அக்கட்சி எம்எல்ஏ சந்திரகுமார். "கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் விஜயகாந்த் எடுக்க வில்லை. தேமுதிகவின் கூட்டணி முயற்சி குறித்து திட்டமிட்டு சில தரப்பினர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். "எந்த முடிவாக இருந்தாலும் விஜயகாந்த் அறிவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். தமிழக மக்கள் ஏற்கும் வகையிலான முடிவை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்," என்று சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!