சறுக்கினாலும் முன்னணியில் நீடிக்கும் டிரம்ப், ஹில்லரி

வா‌ஷிங்டன்: 'சூப்பர் சாட்டர்ட் டே' என வர்ணிக்கப்படும் சனிக் கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் டோனல்ட் டிரம்புக்கும் ஹில்லரி கிளிண்டனுக்கும் லேசான சறுக்கல் ஏற்பட்டது. குடியரசுக் கட்சித் தேர்தலில் கன்சாஸ், மெய்ன் மாநிலங் களில் டென் குரூஸிடம் வெற்றி வாய்ப்பு இழந்தார் டிரம்ப். இருப்பினும் லுவிசியானா விலும் கெண்டக்கியிலும் டிரம்ப் வென்றார். அதேபோல ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் கன்சாய், னெப்ராஸ்கா ஆகிய இடங்களில் பெர்னி சாண்டர் ஸிடம் ஹில்லரி கிளிண்டன் தோற்றார். லுவிசியானாவில் மட்டும் அவருக்கு வெற்றி கிட்டியது. இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றி யில் சனிக்கிழமை லேசான சறுக்கல் ஏற்பட்டபோதிலும் டிரம்பும் ஹில்லரியும் முன்னணி வேட்பாளர்களாக வலம் வருகின் றனர். இந்நிலையில், ஒருவருடன் ஒருவர் நேரடியாக மோதவேண் டும் என்று டோனல்ட் டிரம்ப் மற்றொரு வேட்பாளரான டெட் குருசுக்கு அறைகூவல் விடுத்து உள்ளார்.

அத்துடன், மற்ற வேட்பாளர் களான மார்கோ ருபியோ, ஜான் கசிஷ் போன்றவர்கள் போட்டியி லிருந்து தாங்களாகவே விலகி தாமும் டெட் குருசும் ஒருவருடன் ஒருவர் நேரடியாக மோத வழி விடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற முன்னோடித் தேர்தல்களில் திரு டிரம்ப், திரு குருஸ் இருவரும் தலா இரண்டு மாநிலங்களில் வெற்றி பெற்று மற்ற வேட் பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர்.

கன்சாஸ் மாநிலம் எம்போரிய உயர்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசுக் கட்சித் தேர்தலின்போது வேட்பாளர்களில் ஒருவரான திருவாட்டி ஹில்லரி கிளிண்டனுக்கு ஆதரவாக வாழ்த்து முழக்கமிடுகிறார் ஆதரவாளர் ஒருவர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!