கோலாலம்பூர்: காணாமற்போன மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தினுடையதாக இருக்க லாம் என்ற சந்தேகத்துக்குரிய உலோக பாகம் ஒன்று கண்டெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து மொசாம்பிக்கில் விமானப் போக்குவரத்து அதி காரிகள் இன்று சந்திக்க உள்ளனர். இது குறித்த ஆய்விற்காக மலேசியக் குழு ஏற்கெனவே அங்கு சென்று சேர்ந்துவிட்டதா கவும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகத்தை அடையாளம் காணும் பணியில் ஆஸ்திரேலியக் குழுவுடன் இணைந்து அந்தக் குழு ஈடுபடும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.
"இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் மலேசியக் குழு நாளை (இன்று) மொசாம்பிக் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திக்கும். "அடுத்தகட்ட சோதனைக்காக அந்த பாகம் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதில் எங் களுக்குப் பிரச்சினை இல்லை.
தென் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கண்டெடுக்கப்பட்ட உலோக பாகம். படம்: ஏஎஃப்பி