கலாசார சமூக இளையர் அமைச்சின் பெருந்திட்டம் பற்றி அமைச்சர் கிரேஸ் ஃபூ

தமிழவேல்

தேசிய அடை­யா­ளத்தை­யும் பெருமையை­யும் அனைத்­துச் சிங்கப்­பூ­ரர்­களிடை­யே­யும் வேரூன்றச் செய்து, அக்­கறை­யுள்ள ஒன்­று­பட்ட சமூ­கத்தை உரு­வாக்­கு­வதன் வழி வேற்­றுமை­களை முற்­றா­கக் களைந்து, நாட்டின் வளர்ச்­சிக்­குப் பங்களிக்க முடியும் என்றார் அமைச்­சர் கிரேஸ் ஃபூ. இதில் தேசிய அடை­யா­ளத்தை­யும் பெருமையை­யும் கலைகள், விளை­யாட்டு மூலம் வளர்க்­க­லாம் என்ற அவர், இது குறித்து தமது அமைச்சு ஏற்­கெ­னவே பல திட்­டங்களை உரு­வாக்­கி­யுள்­ளதைச் சுட்­டினார்.

கலை­களில் மேன்மை
சிங்கப்­பூ­ரின் வர­லாற்று, கலாசார, கலைச் சிறப்­பு­கள் பற்றி எடுத்­துரைப்­ப­து­டன் இளை­யர்­களை அதி­க­மாக கலை­களில் ஈடு­படுத்­து­வது தேசிய அடை­யா­ளத்தை வளர்க்­கும் ஒரு வழி.
சிங்கே ஊர்­வ­லம் போன்ற சமூகக் கலை நட­வ­டிக்கை­கள் நாட்டின் பல இனக் கலா­சா­ரத்தை எடுத்­துக்­காட்­டு­கின்றன. அனைத்து சமயத் தலை­வர்­களும் பல சமூக நிகழ்­வு­களில் பங்­கேற்­பது நாட்டின் சமய நல்­லி­ணக்கத்தைக் காட்­டு­கிறது. இது­போன்ற நிகழ்­வு­களை அடிக்­கடி பார்க்­கும் இளை­யர்­கள் இன, சமய நல்­லி­ணக்­கம் நம் வாழ்வோடு ஒன்றிய ஒன்று என்பதை உணர்­வார்­கள் என்று அமைச்­சர் ஃபூ நம்­பு­கிறார்.
மேலும் நமது கலைக் கண்­காட்­சி­களில் சிங்கப்­பூர் உணர்வை வெளிப்­படுத்­தும் காட்சிப் பொருட்­களைத் தேர்ந்­தெ­டுப்­பது, தரம் வாய்ந்த அனைத்­து­லக நிகழ்­வு­களை நடத்­து­வது, நமது கலை­ஞர்­களுக்கு அனைத்­து­லக மேடையில் அங்­கீ­கா­ரம் கிடைக்க வகை செய்வது போன்ற எல்லாம் அவ­சி­யம் என அவர் குறிப்­பிட்­டார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!