சரணடைய மறுக்கும் ஆர்சனல் குழு

லண்டன்: லீக் பட்டத்துக்கான போட்டி யிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஆர்சனல் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் காண்பித்துள்ளது லீக் பட்டியலின் இரண்டாம் நிலையில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இதன் வாயிலாக ஆர்சனல் 52 புள்ளிகள் பெற்று பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்பர்ஸ் குழு 55 புள்ளிகள் பெற்றுள்ளது. எதிரணியின் விளையாட்டரங்கில் களமிறங்கிய ஆர்சனல் 39வது நிமிடத்தில் ஏரன் ரேம்சி மூலம் கோல் போட்டு முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி பத்து நிமிடங்களில் ஆர்சனலுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. தப்பாட்டம் காரணமாக ஆர்சனலின் கோக்குலானுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டார். இதனால் புத்துணர்ச்சி பெற்ற ஸ்பர்ஸ், அடுத்த ஐந்து நிமிடங்களில் கோல் போட்டது. தற்காப்பு ஆட்டக்காரர் டோனி எல்டவெரல்ட் கோல் போட்ட அதிர்ச்சியிலிருந்து ஆர்சனல் மீள்வதற்குள் இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பர்சின் இரண்டாவது கோல் புகுந்தது. இம்முறை ஹேரி கேன் அனுப்பிய பந்து வலைக்குள் சென்றது. வெறும் பத்து ஆட்டக்காரர் களுடன் ஆர்சனலால் ஆட்டத்தைச் சமப்படுத்த முடியாது என்று தோல்வியைச் சந்திப்பது நிச்சயம் என்று பரவலாகப் பேசப்பட்டது.

பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க ஆர்சனல் கோல்காப்பாளர் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!