ஜெயக்கொடி: முட்டாள்தனமான தவறு சிறையில் தள்ளியது

சிங்கப்பூர் துறைமுக ஆணைய ஊழியர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் திரு வி ஜெயக்கொடி. அவருக்கு வயது 76. ஆஸ்திரேலியாவில் அவர் 19 மாத காலம் விசாரணைக் காவ லில் காலத்தைக் கழிக்கவேண் டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்ன காரணம்? தான் செய்த முட்டாள்தனமாக தவறுதான் என்கிறார் அந்த தொழிற்சங்கவாதி. இவர் கடைசி யாக குற்றமற்றவர் என்று சென்ற மாதம் விடுவிக்கப்பட்டார். கடந்த 2014ல் ஒரு கைப்பெட்டி யில் 2.2 கிலோ ஐஸ் எனப்படும் போதைப்பொருளை மறைத்து வைத்து அதை இவரிடம் கொடுத்து சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து ஆஸ்திரேலியா வின் பெர்த் நகருக்கு இவர் அதை எடுத்துச் செல்லும்படி செய்துவிட்டார்கள்.

அந்தச் சூழச்சியில் ஏமாந்ததுதான் இவர் செய்த முட் டாள்தனமான தவறு. ஷங்காயில் சீன மொழி பேசிய ஆப்ரிக்கர் ஒருவர், சிங்கப்பூரில் $7 மில்லியன் முதலீடு செய்து தொழில் தொடங்க இருந்த ஓர் ஆடவர் சார்பாக அந்தப் பெட்டியை திரு ஜெயக்கொடியிடம் கொடுத் தார். பெட்டி ஒரு குடும்ப உறுப் பினரிடம் சேர்க்கப்பட இருந்தது. பெட்டியுடன் பெர்த் நகரில் போய் இறங்கியதும் விமான நிலைய எக்ஸ்ரே கதிர்க்கண்கள் பெட்டி யில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த போதைப்பொருளைக் காட்டிக்கொடுத்துவிட்டன.

திரு ஜெயக்கொடி. முட்டாள்தனமாக தான் செய்த தவறு காரணமாக தான் சிறையில் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக இவர் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!