கார்த்திக்: திட்டமிடுதலே வேகத்துக்கு காரணம்

"அமெரிக்காவில் நடந்த குறும் படங்கள் தொடர்பான நிகழ்ச் சிக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு குறும்படமும் அற்புதமாக இருந் தது. அவை புதுப்புதுக் கதை களைக் கூறின. இங்கேயும் அது போல போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்," என்கிறார் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். திகில் 'பீட்சா' கொடுத்து, 'ஜிகர்தண்டா'வில் வேறு உயரத்தை எட்டி, இப்போது `இறைவி' எனப் படத்தின் தலைப் பிலேயே பொறி வைக்கிறார் மனிதர். "இறைவனோட பெண்பால்தான் `இறைவி'. நம்மைச் சுற்றி இருக் கும் பெண்களின் கதைதான் படம். எல்லா வேலைகளும் முடிந்து வெளியீடு காணத் தயாராக உள்ளது." எஸ்.ஜே.சூர்யாவையும் நடிக்க வைத்திருக்கிறீர்களே?

"இந்தக் கதையை எழுதும் போதே முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினேன். "எஸ்.ஜே.சூர்யா சார் படங்களுக்கு நான் பெரிய ரசிகன். அவருடைய மனோபாவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாதாரணமாகப் பேசும்போதே செம கிண்டல், கேலி செய்வார். அதை அப்படியே படத் திலும் இடம்பெற வைத்துள் ளோம். 'இதில் அவர் நடித்திருக் கிறார்' என்று சொல்வதைவிட 'அவர் அவராகவே வாழ்ந்திருக்கி றார்' என்றுதான் சொல்ல வேண்டும்." உங்களுடைய மூன்றாவது படத்திலும் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா தொடர்ந்து நடிக்கிறார்கள்.

அப்படி என்ன அவர்களிடம் சிறப்பு? "இன்னொருவரை மறந்துவிட் டீர்கள். அவர் கருணாகரன். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன் மூவருமே பிரமாத மான நடிகர்கள். இந்தப் படத்திற் கான கதையை அவர்களை மன தில் வைத்துத்தான் எழுதினேன். இவர்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பது மற்றவர்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தொடர்ந்து இணைந்து பணியாற்றுகிறோம். உறுத்தல் இல்லாமல் இயல்பாக இருப்பது நல்லதுதானே?"

படங்களை வெகு வேகமாக இயக்கி முடித்துவிடுகிறீர்களே? "சரியான திட்டமிடுதலே கார ணம். நான் இயக்கிய 3 படங்களிலுமே, படப்பிடிப்புக்குச் சென்ற பிறகு, அதை மாற்றலாமோ, இப்படிச் செய்யலாமா? என்றெல் லாம் யோசித்ததே கிடையாது. ஏற்கெனவே என்ன முடிவு பண் ணியிருந்தேனோ, அதைத்தான் எடுப்பேன். அதற்கு, சக கலைஞர் களின் ஒத்துழைப்பும் உழைப்பும் தான் முக்கியக் காரணம். ஒரு படத்தை வேகமாகப் படமாக்கி, வெளியிடுவது நல்லது.''

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!