ஸ்டாலின்: தேமுதிகவால் திமுகவின் பணிகள் முடங்காது

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பில் திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் குலைக்க முயற்சி நடப்பதாக அக் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தேமுதிக வுடன் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடிப்பதன் காரணமாக திமுகவின் தேர்தல் பணிகள் முடங்கிவிடவில்லை என்றார். "தேர்தல் கூட்டணி தொடர்பாக தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். அதற்கு முன்னதாக சில தரப்பினர் யூகங் களை எழுப்பி வருகின்றனர். இவ் வாறு செய்து கூட்டணியைக் கலைத்துவிட முயற்சி செய்ய வேண்டாம்," என்றார் ஸ்டாலின்.

திமுக=தேமுதிக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கடந்த இரு தினங்களில் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான வண்ணம் உள்ளன. தேமுதிகவுக்கு 59 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை சம்ம தித்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இத்தகவலை மறுத்த தேமுதிக, கூட்டணி குறித்து வெளியான தகவல்கள் அனைத் துமே வெறும் வதந்திதான் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!