நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்தனவா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது என்கிறார் நடிகை தமன்னா.
"இருவரும் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுக்க வேண்டும். யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கக் கூடாது. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இது போன்று யார் இருக்கிறார் களோ அங்கு காதல் இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.
என்னைப்பொறுத்தவரை இதுவரையில் காதல் என்னும் அனுபவம் வரவில்லை. "அதே சமயம் காதலிக்க எனக்கு நேரமும் இல்லை. எனக்குப் பொருத்தமானவர் யார், அவர் எங்கு இருக்கிறார்? என்று சிந்திக்கவும் நேரம் இல்லை. ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.