சாதாரண கடையில் தேநீர் அருந்திய மத்திய அமைச்சர்

பனாஜி: கோவா மாநில உள்ளாட்சித் தேர்தலில் நேற்று காலை வாக்களிக்க வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தலைநகர் பனாஜியில் உள்ள சாதாரண ஹோட்ட லுக்குள் அப்பகுதி மக்களைப் போல் சாதாரணமாகச் சென்று தேநீர் அருந்திய காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். மக்களோடு மக்களாய் காலையில் வரிசையில் நின்று பனாஜி மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்த மனோகர் பாரிக்கர், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார்.

வழியில் மாசன் டி அமோரின் பகுதியில் காரை நிறுத்தும்படி கூறிய அவர், பாதுகாவலர்களிடம் ஏதும் கூறாமல் சாலை ஓரம் உள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்குள் நுழைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேவாலயங்களுக்குச் சென்றுகொண்டிருந்த கிறிஸ்துவ மக்கள் அந்த ஓட்டலில் நிறைந்திருந்தனர். அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!