ராணுவ நீதிமன்றம் மூலம் அதிகாரிகளுக்குத் தண்டனை

முழு நேர தேசிய சேவையாளர் பிரைவேட் டோமினிக் ஷேரன் லீ 2012ஆம் ஆண்டு ராணுவப் பயிற்சியின்போது மரணமடைந்த விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் இரு அதிகாரிகள் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நேற்று வெளியிட்ட சிங்கப்பூர் ராணுவம், உயிரிழந்த பிரைவேட் லீயின் குடும்பத்தாருக்கு உதவியும் ஆதரவும் வழங்குவதில் கடப்பாட்டுடன் இருப்பதாகவும் கூறியது.

ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கையெறிகுண்டுகளால் எழுந்த ஸிங்க் குளோ ரைடு புகையைச் சுவாசித்ததால் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு பிரைவேட் லீ மரணமடைந்ததாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் ஆயுதப் படை மீதும் அதன் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரைவேட் லீயின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வழக்குச் செலவாக பிரைவேட் லீயின் குடும்பத் தினர் $22,000 தொகையைப் பிரதிவாதிகளுக் குத் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் பிரைவேட் லீயின் தாயார் திருவாட்டி ஃபெலிசியா சியா. இதையடுத்து, ஏற்கெனவே மகனை இழந்து தவிக்கும் அவர் களிடம் வழக்குச் செலவைக் கேட்பது நியாய மற்றது என்பது போன்ற பல ஆதரவுக் குரல்கள் இணையம் வழியாக எழுந்தன.

இந்நிலையில், ராணுவப் பயிற்சி, கொள்கை தளபத்தியத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சான் விக் கய் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கத் தில் நேற்று வெளியிட்ட பதிவு அவற்றிற்கெல் லாம் விளக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

கையெறிகுண்டுகளில் இருந்து கிளம்பிய ஸிங்க் குளோரைடு புகை காரணமாக தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த
முழு நேர தேசிய சேவையாளர் பிரைவேட் லீ. கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!