இரண்டு வாரங்களில் வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதி களுக்கும் வேட்பாளர் நேர்காணலை திமுக நேற்று நிறைவு செய்த நிலையில் அதிமுக தனது நேர் காணலை நேற்று முன்தினம் தொடங்கியது. கிட்டத்தட்ட 26,000க்கும் மேற் பட்டோர் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலை யில் அவர்களில் வெறும் ஐந்து பேரை மட்டும் நேற்று முன்தினம் நேர்கண்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இப்போ தைக்கு அவருக்கு ராசியான எண் 5 என்பதால் அவர் அப்படிச் செய்த தாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் வேட்பாளர் நேர்காணல் தொடரும் என்று கூறப் பட்டபோதும் அது வெறும் கண் துடைப்பு என்றும் ஜெயலலிதா தம் விருப்பப்படிதான் வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் கட்சி வட்டா ரங்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் நடந்த நேர் காணலின்போது தேர்வாளர்கள் வரி சையில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஐவர் அணி இடம்பெறாதது பரபரப்பாகப் பேசப்படுகிறது. அவர்களுக்குப் பதிலாக சாதா ரண பொறுப்புகளில் உள்ள மதுசூத னன், செல்வராஜ், தமிழ்மகன் உசேன் ஆகியோர் நேர்காணலின் போது ஜெயலலிதாவுடன் இருந்தனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஐவரணி பலரிடமும் வசூல் வேட்டையில் இறங்கியதாகக் கிடைத்த தகவலால் அதிர்ச்சியடைந்த அதிமுக தலைமை விரைவில் அவர்களது பதவியைப் பறிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நேற்று முன்தினம் வேட்பாளர்களுக்கான நேர்காணலைத் தொடங்கினார் அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. படம்: தமிழகத் தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!