வெஸ்ட் பிரோம்விச்சிடம் வீழ்ந்த யுனைடெட்

வெஸ்ட் பிரோம்விச்: சாம்பி யன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்று மான் செஸ்டர் யுனைடெட் கொண் டிருக்கும் கனவுக்கு வெஸ்ட் பிரோம்விச் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடை பெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் பிரோம்விச்சிடம் எதிர்பாராத தோல்வியை யுனைடெட் சந்தித் தது. ஆட்டம் 1=0 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் பிரோம் விச்சுக்குச் சாதகமாக முடிந் தது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் யுனைடெட்டின் ஜுவான் மாட்டாவுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். மூன்று நிமிட இடை வெளியில் அவருக்கு இரண்டு முறை மஞ்சள் அட்டை காட்டப் பட்டதால் அதனைத் தொடர்ந்து யுனைடெட் வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனடியாக தமது வியூகத் தை மாற்றி அமைத்த யுனை டெட்டின் நிர்வாகி லுயி வேன் ஹால் ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் பாதிப்புகள் ஏற்படாதபடி பார்த்துக் கொண்டார். பிற்பாதி ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் கோல் முயற்சியில் இறங்கியது. தமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை கோலாக்கத் தவறினார் யுனைடெட்டின் லிங்கார்ட்.

வெஸ்ட் பிரோம்விச் குழுவின் சாலமன் ரொன்டன் வலை நோக்கி அனுப்பிய பந்து யுனைடெட் கோல்காப்பாளர் டி கியாவைக் கடந்து சென்றது. பந்து வலைக்குள் செல்லாமலிருக்க டி கியா எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுவே வெஸ்ட் பிரோம்விச் குழுவின் வெற்றி கோலாக அமைந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!