ஆசிய கிண்ணம் டி20: இந்தியா வெற்றி

மிர்புர்: ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் கிண்ணத்தை இந்தியா வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் போட்டியை ஏற்று நடத்தும் பங்ளாதேஷ் அணியை இந்தியா எதிர்கொண்டது. சக்கைப் போடு போட்ட இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. மழை காரணமாகப் போட்டி தொடங்க தாமதமானதால் 20 ஓவர்களுக்குப் பதிலாக 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். கடந்த போட்டியில் விளையாடிய பவன் நெகி, ஹர்பஜன் சிங், புவனேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அஸ்வின், நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். பங்ளாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓட்டங்களைக் குவிக்க முயன்றனர். ஆனால் நெஹ் ராவும் பும்ராவும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசியதால் தமிம் இக்பால் 13 ஓட்டங்களிலும் சவுமிய சர்க்கார் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அல் ஹசன் அதிரடியாக ஆடி 21 ஓட்டங்கள் குவித்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் பங்ளாதேஷ் அணியின் மஹ்மதுல்லா அதிரடியாகப் பந்தடித்தார். இதனால் அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அதேசமயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சும் துல்லியமாக இல்லை. பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்களை விட்டார். பும்ரா 3 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டார். அதேபோல் அஸ்வினும் 14 ஓட்டங் கள் மட்டுமே விட்டார். பங்ளாதேஷ் அணியில் அதிகப் பட்சமாக மஹ்மதுல்லா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சபீர் ரகுமான் 32 ஓட்டங்கள் எடுத்தார். பங்ளாதேஷ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்தது.

ஆட்டத்தைக் கைப்பற்றியதும் அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய அணியின் நட்சத்திரப் பந்தடிப்பாளர் விராத் கோஹ்லி. இந்திய பந்தடிப்பாளர்களின் அதிரடி ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் பங்ளாதேஷ் சுருண்டது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!