தென்னாப்பிரிக்காவை வென்ற ஆஸி. அணி

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 204 ஓட்டங்கள் குவித்தது. அணித் தலைவர் டு பிளெஸ்ஸி 77 ஓட்டங்கள் குவித்தார். ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், ஃபின்ஞ்சும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் வர்னரும்(77), மேக்ஸ்வேல்லும்(75) சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!