தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது: பழ.கருப்பையா

சென்னை: தமிழகத்தில் தற்போது கொடுங்கோல் ஆட்சி நடப்பதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஈ.வி.கே.சம்பத் 91ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதா தலைமையிலான கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் இப்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். "தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி, தாரகை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியை அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, கைகோர்த்துச் செயல்பட வேண் டும். மீண்டும் ஒருமுறை ஜெய லலிதாவிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டால், தமிழகத்தில் அதிமுக கொடியைத் தவிர எந்தக் கொடியும் பறக்காத நிலை ஏற்பட்டுவிடும்," என்றார் பழ.கருப்பையா.

தமிழகத்தில் 33 முறை அமைச் சரவை மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வேறு எந்த மாநிலத்திலும் இப்படி நடந்த தில்லை என்றார். "அமைச்சர் ரமணா தனது மனைவியுடன் இருந்ததற்கான படம் வெளியானதால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வில்லை. கட்சித் தலைமைக்கு ஒழுங்காகக் கப்பம் கட்டாததால் தான் நீக்கப்பட்டுள்ளார். "இதேபோலத்தான் ஒவ்வோர் அமைச்சரும் பதவியில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்றும் பணியில் அனைத்துத் தரப்பினரும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்," என்று பழ.கருப்பையா மேலும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!