தென்கொரியா - அமெரிக்கா ராணுவப் பயிற்சி

சோல்: தென்கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து மிகப் பெரிய ராணுவப் பயிற்சியை தொடங்கியிருக்கின்றன. வட கொரியாவுக்கு எதிராக அவ்விரு நாடுகளும் அவற்றின் தற்காப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ஆண்டுதோறும் இத்தகைய பயிற்சியை அந்த நாடுகள் மேற்கொண்டு வரு கின்றன. வடகொரியா ஜனவரி மாதம் நான்காவது அணுவாயுத சோதனையை மேற்கொண்டது. சென்ற மாதம் நெடுந்தொலைவு ஏவுகணையை செலுத்தி அந்நாடு சோதனை மேற்கொண்டது. அத்துடன் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்த மாக அணுவாயுதங்களை தயாராக வைத்திருக்குமாறு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சில நாட்களுக்கு முன்பு ராணுவத் தினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியா இப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில் 17,000 அமெரிக்க வீரர்களும் 300,000 தென்கொரிய வீரர்களும் பங்கு கொள்கின்றனர்.

இந்நிலையில் இவ்விரு நாடு களுக்கு எதிராக வடகொரியா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் பயிற்சியை தாக்குதலுக் கான ஒத்திகையாகவே தாங்கள் கருவதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் நாட்டை தற்காத்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணுவாயுதத் தாக்குதல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித் துள்ளது. இந்நிலையில் தென்கொரிய தற்காப்பு அமைச்சு வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சினமூட்டும் செயலில் வடகொரியா ஈடுபட்டால் தென்கொரிய ராணுவம் சரியான பதிலடி கொடுக்கும் என்று தற்காப்பு அமைச்சுப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியில் பங்குகொள்ளும் அமெரிக்க கடற்படை வீரர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!