சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி வழங்கும் முதல்நிலை 'ஹானர்ஸ்' பட்டத்திற்குத் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான கொள்கைச் சீராய்வு முடிவு இவ்வாண்டு ஜூன் மாதத்தில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு முதன் முதலாக அமல்படுத்தப்படும். இந்தச் சீராய்வின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இரண்டாம்நிலை (மேல் பிரிவு) 'ஹானர்ஸ்' பட்டமும் பெறுவர். தற்போது 50 % மட்டுமே இந்தப் பிரிவில் வகைப்படுத்தப் படுகின்றனர். அது 65% முதல் 68% ஆக உயர்த்தப்படும். எடுத்துக்காட்டாக, இந்த மாற்றத்தினால் ஓராண்டில் 240 மாணவர்கள் பட்டக் கல்வியை முடித்தால், அதில் 24 பேருக்கு முதல்நிலை 'ஹானர்ஸ்' பட்டமும் அடுத்த 156 பேருக்கு (அதாவது 65%) இரண்டாம்நிலை (மேல் பிரிவு) 'ஹானர்ஸ்' பட்டமும் வழங்கப்படக்கூடும். இந்தத் தகவலை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவர் பேராசிரியர் சைமன் செஸ்டெர்மேன் கடிதம் மூலம் மாணவர்களுக்கு நேற்றுத் தெரிவித்தார்.
அதிகமானோருக்கு முதல், 2ஆம் நிலை ‘ஹானர்ஸ்’ பட்டம்
8 Mar 2016 11:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2016 08:38

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!