‘ரெமோ’ என்ற தலைப்புக்கான காரணம் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது 'ரெமோ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு தோற்றங்களில் வருகிறாராம். இதற்காக பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் சீன் பூட்டை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு இவ்வாறு வைத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இதில் சிவாவுக்கு ஆண், பெண் என இரு தோற்றங்களாம். இதில் ஆண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் 'ரெ' என்று தொடங்குமாம். பெண்ணாக வலம் வரும் சிவாவின் பெயர் 'மோ' என்று தொடங்குமாம். இதனால்தான் படத்திற்கு 'ரெமோ' என்று பெயர் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, மேலும் பல தோற்றங்களில் திரையில் தோன்ற உள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவைக் கவனிக்க, அனிருத் இசைய மைக்கிறார். ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!