நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு: விசாரணை

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு: விசாரணை கொச்சி: பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பதையடுத்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி போலிஸ் படை தனது ஆரம்பக்கட்ட பணி களைத் தொடங்கியுள்ளது. நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி கடந்த சனிக்கிழமை கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருடைய வீட்டில் அவர் சுய நினைவின்றி இருந்ததாகக் கூறப் படுகிறது. உள்ளூரிலுள்ள மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு கொச்சி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு 7.15 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட் சுமி என்கிற மகளும் உள்ளார்கள்.

கலாபவன் மணியின் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக அவரு டைய சகோதரர் ராமகிருஷ்ணன் போலிசிடம் புகார் அளித்ததால் அதனை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலிஸ் துணை கண்காணிப்பாளர் கே. சுதர்சன் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள தனிப்படை நேற்று முன் தினம் இரவு கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை செய்தது. அந்த இல்லத்தில்தான் கலா பவன் மணி சுயநினைவு இன்றிக் கிடந்தார். பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். நேற்று முன்தினம் அந்த இல்லத்தில் கலா பவன் மணியுடன் தங்கி இருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட ஐந்து பேரை போலிசார் விசாரித்து வருகின் றனர். கள்ளச்சாராயத்தில் உள்ள 'மெத்தனால்' என்ற நச்சு அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், கலாபவன் மணியின் உடல் திருச்சூர் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்றுக் காலை உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சாலக்குடியிலுள்ள கலாபவன் மணி யின் இல்லத்தில் இறுதிச் சடங்கு கள் நடைபெற்றன. 45 வயதில் அவர் மாண்டதற்கு தொடர்ந்து அதிகளவு மது அருந்தி வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகர் கலாபவன் மணி (வயது 45). படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!