சூர்யாவால் கண்கலங்கிய நித்யா மேனன்

சூர்யா தற்போது '24' படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் சூர்யா அனைவரிடமும் அன்பாகப் பழகி வருகிறாராம். இந்நிலையில் அண்மைய படப்பிடிப்பின்போது, நித்யா மேனன் ஒரு காட்சியில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தினாராம். அதைக்கண்ட சூர்யா அவரை மனம் திறந்து, எல்லோர் முன்னிலையிலும் பாராட்டியுள்ளார்.

இதனால் உற்சாகம் அடைந்த நித்யா மேனன், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், மன நெகிழ்ச்சி காரணமாகப் படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே கண் கலங்கியுள்ளார். '24' படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!