விஜயகாந்த் மதுரையில் போட்டியிட வேண்டும்: நிர்வாகிகள் வலியுறுத்து

மதுரை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் விரும்பு வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அவரது சொந்தத் தொகுதி என்பதால் அங்கு தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கட்சி நிர்வாகிக ளும் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல் வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதற் காக ரகசிய பேச்சுவார்த்தைகள், நேரடிச் சந்திப்புகள் நடந்து வருவ தாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதுரையில் விஜயகாந்த் வீடு அமைந்துள்ள மத்திய தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்று தென் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் தமது இளமைக்காலத்தில் மதுரையில் தான் வளர்ந்தார் விஜயகாந்த்.

அங்கு அவரது தந்தையின் அரிசி ஆலையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்திய தொகுதியில் விஜயகாந்துக்குச் சொந்த செல்வாக்கு இருப்பதாகக் குறிப் பிடும் அவர், மக்கள் ஆதரவும் சுலபமாகக் கிடைக்கும் என்கிறார். "கடந்த முறை மதுரை மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம். எனவே இம்முறை மதுரை மத்திய தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதுவே ஒட்டுமொத்த கட்சியின் எதிர் பார்ப்பு," என்கிறார் மதுரை மாநகர் மாவட்ட தேமுதிக செயலர் சிவமுத்துக்குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!