நான்கு குற்றச்சாட்டுகளில் அய் டகாகி குற்றவாளி

செயலற்றுப் போயிருக்கும் 'த ரியல் சிங்கப்பூர்' என்ற சமூக அரசியல் இணையத்தளத்தின் முன்னைய ஆசிரியரான அய் டகாகி, கீழறுப்புச் சட்டத்தின்கீழ் 4 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியரான 23 வயது அய் டகாகி தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நேற்று ஒப்புக் கொண்டார். ஃபேஸ்புக் பக்கத்திலும் 'த ரியல் சிங்கப்பூர்' என்ற சிங்கப்பூர் செய்தித் தளத்திலும் ஆத்தி ரத்தைத் தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் மூன்று கீழறுப்பு குற்றச்சாட்டுகளையும் இணையத் தளத்தில் விளம்பர வருவாய் குறித்த நிதி விவரங்களை காவல் துறையினரிடம் வழங்காத குற்றச் சாட்டையும் அய் டகாகி ஒப்புக் கொண்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் அவருக்கு தண்டனை விதிக்கப் படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த நிலையில் மாவட்ட நீதிபதி சலினா இஷாக், தண்டனை விதிக்கப்படும் தேதியை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். டகாகியும் அவரது சிங்கப்பூர் கணவர் யாங் கைஹெங்கும், 27, நேற்று முன்தினம் கூட்டாக விசாரணையை எதிர்நோக்கு வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆஸ்திரேலியரான 23 வயது அய் டகாகியும் அவரது சிங்கப்பூர் கணவர் 27 வயது யாங் கைஹெங்கும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!