பிரதமர் நஜிப்பைக் கடத்த திட்டமிட்டிருந்தது ஐஎஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் உள்ளிட்ட மேலும் பல மலேசியத் தலைவர்களை ஐஎஸ் குழுவினர் கடத்தத் திட்ட மிட்டிருந்ததாக மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் கூறினார். உள்துறை அமைச்சருமான திரு சாஹிட், தம்மையும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் உள்ளிட்ட பலரையும் கடத்த ஐஎஸ் குழுவினர் திட்டமிட்டிருந்த தாகவும் தெரிவித்தார். ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய மொத்தம் 13 பேர் சென்ற ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திரு நஜிப், ஹிசாமுதின் உள்ளிட்ட பலரைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாக அகமட் சாஹிட் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

உள்ளூர் ஐஎஸ் குழுவினரின் சதித்திட்டத்தை மலேசிய போலிசார் கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக முறியடித்ததாக திரு சாஹிட் மேலும் கூறினார். மலேசியாவில் ஐஎஸ் போராளி கள் திட்டமிட்டிருந்த பயங்கர வாதத் தாக்குதலை முறியடிப்பதில் போலிசார் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது திரு சாஹிட் இதுபற்றி தெரிவித்தார். ஐஎஸ் குழுவினர் மலேசியாவில் திட்டமிட்டிருந்த நான்கு தாக்குதல் சம்பவங்களை போலிசார் முறியடித் திருப்பதாகவும் திரு சாஹிட் கூறினார். கெடாவில் செயல்பட்டு வருவதாக நம்பப்படும் உள்ளூர் ஐஎஸ் குழு புக்கிட் பினாங்கில் துப்பாக்கிகளையும் ஜெண்டிங் ஹைலண்ட்ஸில் ஒரு பாதுகாப்பு வாகனத்தையும் திருடிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!