ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டார் ஷரபோவா

லாஸ் ஏஞ்சலிஸ்: உலகின் ஏழாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 28, ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது சோதனையில் நிரூபணமானது. இதையடுத்து, வரும் 12ஆம் தேதியில் இருந்து டென்னிஸ் விளையாட்டில் இருந்து அவர் தற் காலிக இடைநீக்கம் செய்யப்படு வதாக அனைத்துலக டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை யுமான ஷரபோவா 'மெல்டோனியம்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக்கொண்டதைச் செய்தியாளர்கள்முன் ஒப்புக் கொண்டார்.

"சோதனையில் தோற்றதற்கு நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன். உடல்நலப் பிரச்சினைகளுக்காகக் கடந்த பத்து ஆண்டுகளாக அந்த மருந்தை நான் எடுத்து வந்துள் ளேன். ஆனால், இவ்வாண்டு முதல் அந்த மருந்தும் தடை செய் யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதை நான் அறிந்தி ருக்கவில்லை," என்றார் ஷரபோவா. தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்து தமக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டபோதும் அதிலிருந்த இணைப்பைத் தாம் பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். முறையற்ற இதயத் துடிப்பிற் காகவும் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்ததாலும் 2006 முதல் அவர் அந்த மருந்தை உட் கொண்டு வந்துள்ளார்.

தாம் மிகப் பெரிய தவற்றை இழைத்துவிட்டதாகக் கூறிய அவர், "சில கடுமையான விளைவுகளை எதிர்நோக்கியிருப்பதை நான் அறி வேன். ஆனாலும் என் டென் னிஸ் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ள நான் விரும்ப வில்லை. எதிர்காலத்தில் மீண்டும் டென்னிஸ் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றும் சொன்னார். அவருக்கு அதிகபட்சமாக நான்காண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வ தாக அறிவித்துள்ளது பிரபல விளையாட்டு ஆடை தயாரிப்பு நிறு வனமான 'நைக்'. கடந்த 2010ல் அந்நிறுவனத்துடன் $98.8 மி. தொகைக்கு எட்டாண்டு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டார் ஷரபோவா.

ஷரபோவா ஊக்கமருந்துச் சோதனையில் தோற்றதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்தபோதும் அதை அவரே ஒப்புக்கொண்டதை டென்னிஸ் உலகம் வரவேற்றது. ஷரபோவா தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டாலும் இவ்வாண்டு பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவை அவர் பிரதிநிதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரஷ்ய டென்னிஸ் சங்கத் தலைவர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!