டோனிக்கு நிகரில்லை - விராத் கோஹ்லி

புதுடெல்லி: ஆட்டத்தை முடித்து வைப்பதில் ஒருநாள், டி20 கிரிக் கெட் போட்டிகளுக்கான இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியே உலகில் மிகச் சிறந் தவர் என்று புகழ்மாலை சூட்டி இருக்கிறார் டெஸ்ட் போட்டிகளுக் கான இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் ‌ஷிகர் தவானும் விராத் கோஹ்லியும் இணைந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனாலும், ஓவருக்கு எட்டுக்கு மேல் ஓட்டம் எடுக்கவேண்டும் என்ற நிலை இறுதி வரைக்கும் தொடர்ந்ததால் வெற்றி கை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களிடம் இல்லாமல் இல்லை.

இந்நிலையில், 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ‌ஷிகர் தவான் ஆட்டமிழக்க, கடைசி இரு ஓவர் களில் 19 ஓட்டங்கள் தேவைப் பட்டது. ஆனாலும், பங்ளாதேஷ் பந்துவீச்சாளரை மிக எளிதாக எதிர்கொண்டு ஐந்து பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 20 ஓட்டங்களை டோனி விளாச, ரசிகர்கள் நிம்மதியடைந் தனர். "அணியின் ஓட்ட விகிதத்தை சரியவிடக்கூடாது என்ற எனது பணியை அறிந்து நான் விளை யாடினேன். தவான் சற்றுத் தடு மாறிய நேரத்தில் பவுண்டரிகளை அடுத்து நெருக்கடியைக் குறைத் தேன். பிறகு டோனி வந்தார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதை மிகச் சிறப்பாக நிறைவேற் றினார். ஆட்டத்தை முடித்து வைப் பதில் உலகிலேயே அவர்தான் வல்லவர்," என்றார் கோஹ்லி. ஆசியக் கிண்ணத்தைக் கைப் பற்றியது டி20 உலகக் கிண்ணத் தையும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை வீரர்கள் மனத்தில் விதைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!