புதுடெல்லி: விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடிவரை கடன் கொடுத்துள்ளன. பஞ்சாப் நேஷனல், கனரா, பரோடா வங்கி ஆகியவையும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்குக் கடன் அளித்த மற்ற வங்கிகள். இருப்பினும், கிங்ஃபிஷர் நிறு வனம் கடுமையான இழப்பைச் சந்தித்தது. நீண்டகாலமாக கட னைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனத்தின் மூன்று இயக்குநர் களையும் 'வேண்டுமென்றே பணத் தைத் திருப்பி செலுத்தத் தவறிய மோசடி யாளர்கள்' என்ற பட்டி யலின்கீழ் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் அறிவித்தன.
அத்துடன், இந்தியாவில் இருந்து விஜய் மல்லையா தப்பி ஓடிவிடக்கூடாது என்றும் இவை முடிவெடுத்தன. இதன் தொடர்பாக கடன் கொடுத்த வங்கிகள் விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவரைக் கைது செய்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகள் இணைந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத் துறை நேற்று பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா வெளியேற அனு மதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஸ்டேட் வங்கி சார்பாக மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. படம்: ஏஎப்பி